வடக்கு முதலமைச்சர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டாரா?

Thermo-Care-Heating

thuraiyappaயாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற துரையப்பா விளையாட்டரங்குத் திறப்பு விழாவில் உரையாற்றிய சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முதலமைச்சரை விழிக்காது உரையை ஆரம்பித்தமை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியதுடன், சிறீலங்கா அதிபர் வேண்டுமென்றே செய்தாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

துரையப்பா விளையாட்டரங்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமையன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டுத்துறை அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன் உட்பட யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கண்ணாடி அறையினுள் சென்று அமர்ந்தனர்.

இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் செல்லும்போது அவரது பாதுகாவலரை அவருடன் செல்வதற்கு சிறீலங்கா அதிபரின் மெய்ப்பாதுகாவலர்கள் அனுமதி வழங்கவில்லை.

இதனால் பாதுகாவலரின் உதவியின்றி தனது ஆசனத்துக்குப்போன முதலமைச்சர் படியொன்றில் தடக்கிவிழுந்தார்.

அங்கு வருகைதந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் மெய்ப்பாதுகாவலர்களும் அவர்களுடன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டபோதிலும் வடக்கு மாகாண முதலமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் மாத்திரம் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனால் வடக்கு மாகாண முதலமைச்சர் சிறீலங்கா அதிபரால் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டாரா? என அங்கிருந்த மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ideal-image

Share This Post

Post Comment