வடக்குக் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – ஹக்கீம்!

ekuruvi-aiya8-X3

hakkim 22எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்குக், கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும், வட-கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் ஐக்கியதேசியக் கட்சியின்கீழ் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி – உடுநுவர பிரேச செயலகத்திற்கு உட்பட்ட கொன்டியாதெனிய அல்டன்வத்தை சமூக நீர் வழங்கல் திட்டத்தினை மக்களுக்குத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூராட்சித் தேர்தலில் 15.6 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், இதற்காக, மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்காக 335 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment