விமல் வீரவன்சவின் கட்சிக்குள் முரண்பாடு!

Facebook Cover V02

vimal weeravansaவிமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 19ம் திகதி கட்சியின் முக்கிய அரசியல் சபைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜே.என்.பி கட்சி 17 அரசியல் சபை உறுப்பினர்களைக் கொண்டமைந்த ஒரு கட்சியாகும்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் மற்றும் போராட்டத்தை கைவிட்ட விதம் தொடர்பில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் இந்த நடவடிக்கையினால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்சவின் குடும்ப உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்களை அடிமைகளாக நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Share This Post

Post Comment