முன்னாள் தளபதி நகுலனின் கைது – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ekuruvi-aiya8-X3

nakulan45545பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி கைது செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது உறவினர்களினால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகுலனின் தாயார் கண்மணி குறிப்பிடுகின்றார்.

இன்று காலை நகுலனின் தந்தை மற்றும் மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பில் நகுலனின் தாயார் கண்மணி தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் சிறப்பு தளபதியான நகுலன் இறுதி யுத்தத்தின் பின்னர், இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு வழங்கப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு விடுதலைச் செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு தரப்பினரின் பங்களிப்புடனும், பாதுகாப்பு தரப்பினரின் முன்னிலையிலும் திருமணம் முடித்து இல்லற வாழ்வினைத் தொடங்கினார்.

திருமணம் முடித்து 15 நாட்களில் மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட அவர் விசாரணை செய்யப்பட்டார். இதன்போது, எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும், நிம்மதியாக வாழ்க்கையினை நடத்தலாம் என்று கூறி விடுதலைச் செய்யப்பட்ட அவர், தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளமையானது, எங்களுக்கு அச்சமான ஒரு சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றது’ என்றும் கூறினார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்ட நகுலன், தற்போது வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.

Share This Post

Post Comment