முன்னாள் ஜனா­தி­ப­திக்கு 103 இரா­ணு­வத்­தி­னரும் 103 பொலி­ஸாரும் தற்­போதும் பாது­காப்பு வழங்­கு­கின்­றனர். மாற்றம் எதுவும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை

mahina_06பாரா­ளு­மன்றம் நேற்று புதன் கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கூடி­யது. இதன் போது பிரே­ர­ணைகள், முன்அறி­விப்­புக்­களின் பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணியின் கொழும்பு மாவட்ட எம்.பி. தினேஷ் குண­வர்த்­தன நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்­டில்-­ கேள்­வி­களை முன்­வைத்தார்.

அண்­மையில் புலி­களின் புதிய தற்­கொலை அங்கி உட்­பட ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நாட்டின் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்த புலி­களின் மரண அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளான முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள விசேட பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட கொமாண்டோ படை­யினர் பாது­காப்பு நீக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான உத்­த­ரவு விடுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

இதன் போது குறுக்­கிட்ட சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தற்­கொலை அங்கி மற்றும் ஆயு­தங்கள் தொடர்பில் தினேஷ் குண­வர்த்­தன எம்­.பி.க்கு தக­வல்கள் தெரியும் என பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் இர­க­சிய பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­வித்­துள்ளார் என்றார்.

இதன்போது எதிர்த்­த­ரப்பில் கூச்சல் குழப்பம் ஏற்­பட்­டது. தொடர்ந்து தனது கேள்­வி­களை முன்­வைத்த தினேஷ் எம்.பி. முன்னாள் ஜனாதிபதிக்கு இந்­தி­யாவின் கருப்பு பூனை படைப்­பி­ரிவு மற்றும் அங்கு பிர­த­ம­ருக்குபாது­காப்பு வழங்கும் படை­யி­னரின் பயிற்சி பெற்ற விசேட கமாண்டோ படை­யி­னரின் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே இப்­பா­து­காப்பு வழங்­கப்­பட்­டது. தற்­போது இது நீக்­கப்­பட்டு பொலி­ஸாரின் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அரசு இத்­தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளதா? மே 10ஆம் திகதி பாது­காப்பு நீக்­கப்­ப­டுமா? இத் தீர்­மானம் முன்னாள் ஜனா­தி­ப­தியின் உயி­ருக்கு அச்­சு­றுத்தலாகும். இதற்கு பிர­தமர் பதி­ல­ளிக்க வேண்­டு­மென்றார்.

இதற்கு பிர­தமர் சார்பில் சபையில் பதி­ல­ளித்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல, முன்னாள் ஜனா­தி­ப­தியின் விசேட பாது­காப்பை நீக்க எந்தத் தீர்­மா­னத்­தையும் அரசு மேற்­கொள்­ள­வில்லை.

முன்னாள் ஜனா­தி­ப­திக்கு 103 இரா­ணு­வத்­தி­னரும் 103 பொலி­ஸாரும் தற்­போதும் பாது­காப்பு வழங்­கு­கின்­றனர். மாற்றம் எதுவும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றார்.
இதனை எதிர்க்­கட்­சியினர் ஏற்றுக் கொள்ள மறுத்­தனர். இதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது என எம்­.பி.க்­க­ளான விமல் வீர­வன்ச, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, ரோஹித அபே­கு­ண­வர்­தன உட்­பட எதிர்த்­த­ரப்­பினர் தமது எதிர்ப்பை சபையில் வெளி­யிட்­ட­தோடு கூச்­ச­லிட்­டனர்.
இதன் போது எழுந்த அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா,
2010 ஜனாதி­பதி தேர்தல் முடிந்த 5 நிமி­டத்தில் எனக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த விசேட பாது­காப்பு நீக்­கப்­பட்­டது.

என்னை சிறையில் அடைத்­தார்கள். அங்கு விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களும் இருந்­தார்கள். ஆனால் அங்கும் எனக்கு எது­வி­த­மான பாது­காப்பும் வழங்­கப்­ப­ட­வில்லை.
எனக்கும் விடு­த­லைப்­புலிகளால் அச்­சு­றுத்தல் இருந்­தது. அத்­தோடு நாட்டின் பாது­காப்பு நிலை­மை­களை கருத்தில் கொண்டே பாது­காப்பு வழங்­கு­வது தொடர்பில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என்றார்.

அமைச்சர் சரத் பொன்­சேகா சபையில் உரை­யாற்றும் போது எதிர்த்­த­ரப்­பினர் அவரை பேச­வி­டாது கூச்­ச­லிட்­டனர்.

இதன் போது எதிர்க்­கட்சி எம்.பி. சேம­சிங்க (செவ்­வாய்க்­கி­ழமை) பாது­காப்பு இராஜாங்க அமைச்­சர் தொலைக்­காட்சி நேர்­கா­ணலில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் விசேட பாது­காப்பு நீக்­கப்­படும் என தெரி­வித்தார் என்றார்.

இதனை மறு­த­லித்த சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்ல அது நேற்று (செவ்வாய்) நான் இன்று (நேற்று) கால விட­யத்தை கூறு­கிறேன்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. அது தொடர்பாக தீர்மானமும் எடுக்கப்படவும் இல்லை யென்று திட்டவட்டமாக சபையில் தெரிவித்தார்.
இதன் போது சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி இந்நாள் ஜனாதிபதி உட்பட பிரதமர் ஆகியோரது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதில் எனக்கும் பொறுப்புள்ளது என்றார்.


Related News

 • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
 • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
 • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
 • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
 • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
 • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
 • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *