முன்னாள் விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு பெற்றார்களா என அறியவே கைதுசெய்தோம்!

sdsd

jayanathj5கைதுசெய்யப்படும் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்களா என்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் போராளிகள் காவல்துறையினரால்தான் கைது செய்யப்படுகின்றனர்.

அவர்களை இராணுவம் கைதுசெய்யவில்லை. இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினரிடம் கலந்துரையாடி தீர்வினைப் பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment