மும்மடங்கு கேஷ்பேக் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ: புதிய சலுகை அறிவிப்பு

Reliance-Jioஇந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ 100 சதவிகித கேஷ்பேக் வழங்கியது. இதை தொடர்ந்து இம்முறை அறிவித்துள்ள புதிய திட்டத்தில் மும்மடங்கு கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிகமான விலையில் ரீசார்ஜ் செய்யும் போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 100 சதவிகிதம் கேஷ்பேக் சேர்த்து ரூ.400 மதிப்புடைய கேஷ்பேக் வழங்கப்பட்டது.

முன்னதாக அமேசன் பே, பேடிஎம், போன்பெ, மொபிகுவிக் மற்றும் ஃப்ரீசார்ஜ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ரூ.300 மதிப்புடைய கேஷ்பேக் வழங்குகிறது. சமீபத்தில் ஆக்சிஸ் பே நிறுவனத்துடன் இணைந்து ரூ.100 கேஷ்பேக் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.1,899 மதிப்புடைய வவுச்சர்களை வழங்க பல்வேறு முன்னணி இணைய வர்த்தகர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ இணைந்துள்ளது.

ஜியோ அறிவித்துள்ள மும்மடங்கு கேஷ்பேக் முழு விவரங்கள்:

– ரூ.399 மற்றும் அதற்கும் அதிகமான ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவிகித கேஷ்பேக் அதவாது ரூ.400 (ரூ.50X8) வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் கேஷ்பேக் வவுச்சர்களை நவம்பர் 15-ம் தேதி முதல் பயன்படுத்த முடியும்.

– அமேசான் பே, ஆக்சிஸ்பே, ஃப்ரீசார்ஜ், மொபிகுவிக், பேடிஎம் அல்லது போன்பெ உள்ளிட்ட வேலெட்களை கொண்டு ரீசார்ஜ் செய்யும் போது உடனடி கேஷ்பேக் ரூ.300 வரை பெற முடியும்.

– ஜியோ சிறப்பு வவுச்சர்கள் ஏஜியோ, யாத்ரா மற்றும் ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் தளங்களிலும் வழங்குகிறது. ஏஜியோ வவுச்சர் வாடிக்கையாளர்கள் ரூ.1,500க்கும் அதிகமாக பொருட்களை வாங்கும் போது ரூ.399 வரை தள்ளுபடி பெற முடியும்.

இத்துடன் யாத்ரா தளத்தில் விமான பயணச்சீட்டுகளை வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடி மற்றும் ஒருவழி பாதை டிக்கெட்களுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் தளத்தில் ரூ.1999க்கும் அதிகமாக பொருட்களை வாங்கும் போது உடனடி தள்ளுபடி ரூ.500 வரை வழங்கப்படுகிறது. அனைத்து வவுச்சர்களும் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கும்.

தீபாவளி மாதத்தில் ஜியோ சலுகை திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 சவிகிதம் கேஷ்பேக் மற்றும் புதிய சலுகைகள் நவம்பர் 10-ம் தேதி நவம்பர் 25-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.


Related News

 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை – எடப்பாடி பழனிசாமி
 • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
 • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *