மும்பை அடுக்குமாடி விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ekuruvi-aiya8-X3

Ghatkopar-building-collapse-PM-sanctions-compensationமராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடம் ஜூலை 25-ம் தேதி இடிந்து விழுந்தது. விபத்துக்குள்ளான கட்டிடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட தேசிய மீட்புப் படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

Share This Post

Post Comment