முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு இன்று!

Thermo-Care-Heating

முள்ளிவாய்க்கால்!
எப்படி மறப்பது?

வெடிகுண்டு கலக்காத மழை
கந்தகம் கலக்காத காற்று
இரத்தம் கலக்காத தண்ணீர்

செத்தவனை புதைக்க சிறு நேரம்
தொலைத்தவனை தேட ஒரு பகல்
கஞ்சிக்கு ஒருபிடி அரிசி
காயத்திற்கு சிறு துளி மருந்து

கையெடுத்த தெய்வங்களின்
கடைக்கண் பார்வை.
அழுவதற்காவது அவகாசம்

மனித மிருகங்களில்
கொஞ்ச நேயம்

இவை
எதுவுமே கிடைத்திராத
ஒரு நிலத்தின்,காலத்தின்
குறியீடு அது.
எப்படி மறக்கமுடியும்?

முள்ளிவாய்க்கால்!
நெருப்பின் மிச்சமிருக்கும்
சாம்பல் நிலம் அது.

இருள் விலக்கும்
எந்தப் பெருவெளிச்சத்திற்கும்
பொறியை
அங்கிருந்துதான்
எடுத்தாளவேண்டும்.

May 2016
இந்திரன் ரவீந்திரன்

ideal-image

Share This Post

Post Comment