திருமலை – முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு

ekuruvi-aiya8-X3

imagesஇறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18ஆம் திகதியன்று தமிழர் தாயகமென்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருகோணமலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் இந்நிகழ்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை உட்துறை வீதியில் அமைந்துள்ள குறித்த நிலையத்தில், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அஞ்சலி செலுத்துபவர்களை கலந்துகொள்ளுமாறு நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை வி.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இன அழிப்பை உலகிற்கு நினைவூட்டுவதோடு, உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இம்முறையும் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுவதோடு, இந் நாட்களில் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment