முள்ளிக்குளத்தில் கடற்படையினர் அபகரித்த மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை!

Thermo-Care-Heating

mullikkulamமன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிக்குள மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை, கடற்படைத் தளபதிகள் ஆகியோர் இந்த அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குள மக்கள் நேற்று 38 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மக்களின் காணிகளின் எல்லைகளை அடையாளப்படுத்தி தருமாறு ஸ்ரீலங்கா கடற்படையினர் வட மேற்கு பிராந்திய கட்டளைத் தலைமை அதிகாரி கோரியதன் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்குள் மீண்டும் அனுமதிப்பதாக தெரிவித்து 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி இராணுவம் தம்மை வெளியேறியதாக முள்ளிக்குளம் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கும் பாரம்பரிய தொழில்களை செய்வதற்கும் தாம் அனுமதிக்கப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

தம்மை வெளியேற்றிய பின்னர் தமது முழுமையான கிராமத்தையும் ஆக்கிரமித்து கடற்படையின் வடமேற்கு பிராந்திய கட்டளைத் தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக முள்ளிக்குள மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment