முள்ளிக்குளம் மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்தார்!

Thermo-Care-Heating

download-8கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முள்ளிக்குள மக்களை நேற்று காலை சர்வதே மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் நாள் சிறிலங்கா கடற்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்றுவரை சொந்த கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று 12ஆவது நாளாக குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொது செயலாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

download-9

 

ideal-image

Share This Post

Post Comment