முல்லைத்தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6பேர் உண்ணாவிரதத்தில்!

ekuruvi-aiya8-X3

Mullaitheevu-Fasting-News-01-720x480முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று (வியாழக்கிழமை) காலை முதல் ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் ஒரு பக்க சார்பாக செயற்படுவதாக தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

குறித்த காணியில் தாம் 1983ஆம் ஆண்டிலிருந்து வசித்து வருவதாகவும், தமது காணியை பிறிதொருவர் உரிமைகோரிவரும் நிலையில், குறித்த காணிப்பிணக்கு 7 வருடமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்றுவரை தமக்கான நீதி கிடைக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்குரிய நீதி கிடைக்கும் வரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தினைக் கைவிடப்போவதில்லையெனவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும், அரசியல்வாதிகளும் வருகை தரும் பட்சத்தில்லேயே தமது போராட்டம் கைவிடப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பம் தெரிவித்துள்ளது.

மேலும், தாம் 7 வருடமாக எவ்வித பாதுகாப்புமற்ற தற்காலிக கொட்டகையிலேயே வசித்து வருவதாகவும், தமக்கு மலசல கூடம், வீட்டு திட்டம் உட்பட எவ்வித அரச உதவிகளையும் கிராம சேவையாளர் தருவதில்லை எனவும் குறித்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Mullaitheevu-Fasting-News-03 Mullaitheevu-Fasting-News-02

Share This Post

Post Comment