இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

பிரபல போர்பஸ் பத்திரிக்கை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் அறிவிக்கும். இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.

Mukesh-Ambaniவிப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து ஹிந்துஜா சகோதரர்கள், பல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி உள்ளனர்.

100 பேர் கொண்ட பட்டியலில் 4 பெண்கள் மட்டுமே இந்த ஆண்டில் இடம் பெற்றுள்ளனர். பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா இப்பட்டியலில் 39-ம் இடம் பிடித்துள்ளார்.






Related News

  • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
  • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *