முகநூலிலும் தேர்தல் விழிப்புணர்வு

ekuruvi-aiya8-X3

facebookதேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை முகநூலில் (ஃபேஸ் புக்) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை முகநூலின் இந்திய தலைமை நிர்வாகி எம்.ஆங்கிதாஸ் திங்கள்கிழமை சந்தித்தார். இதுகுறித்து, ராஜேஷ் லக்கானி கூறியது:-

தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. இதைப் பயன்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும். வாக்களிப்பதை நினைவூட்டும் வகையில் செய்திகள் வாக்குப் பதிவு தினத்துக்கு முந்தைய தினமான மே 15ஆம் தேதியன்று அனுப்பப்படும்.

மேலும், வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச் சாவடி விவரங்கள், வாக்குச் சாவடி அமைவிடங்கள் ஆகிய தகவல்கள் அடங்கிய இணையத் தொடர்பு முகநூலில் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இதுகுறித்து ஆங்கி தாஸ் கூறியது: தமிழகத்தில் 5.78 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1.8 கோடி பேர் முகநூல் கணக்கு வைத்திருக்கின்றனர். இந்தப் புதிய முயற்சியால் அனைவரையும் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்க முடியும்.
நாட்டிலேயே முதல் முறையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளம், புதுச்சேரியிலும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்.

வாக்குப் பதிவின் போதும், முந்தைய நாளிலும் தேர்தல் தொடர்பாகச் செய்யப்படும் அனைத்து பிரசாரச் செய்திகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றார். ஏற்கெனவே, சுட்டுரையுடன் (ருவிட்டர்) தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment