ஜெர்மனியின் மென்பொருள் நிறுவன தூதராக தோனி நியமனம்

ekuruvi-aiya8-X3

MS-Dhoniஜெர்மனியை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
வார்டுவிஷ் என்ற அந்த மென்பொருள் நிறுவனம் 3 ஆண்டுக்கு தோனியை தூதராக 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தோனியை தூதராக நியமித்ததன் மூலம் இந்தியாவில் திறம்பட செயல்பட முடியும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெர்மனி நிறுவனத்தை தொடர்ந்து தோனி புனேவை அடிப்படையாக கொண்டு செயல்படும் இண்டிகோ பெயின்ட் கம்பெனியின் தூதராகவும் கையொப்பமிட்டுள்ளார்.
இது தவிர ரன் ஆதாம் நிறுவனத்தின் ஆலோசகராகவும், தூதராகவும் கையொப்பமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தோனி கூறியதாவது,
Wardwiz நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.  என்னுடைய ஐடியா மற்றும் நிறுவனமும் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை துறந்தும் விளம்பரம் மூலம் அதிகளவு தோனி சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment