சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளத்தால் பரபரப்பு

ekuruvi-aiya8-X3

pallamசென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடத்தில் 40 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் அந்த பள்ளத்தை விரைவாக சென்று, அந்த பள்ளத்தை முழுவதுமாக மூடினர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நந்தனத்தில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் விஜயராகவா சாலை, வடக்கு போக்கு, ஜிஎன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. அண்ணாசாலையில் இருந்து நந்தனம் நோக்கி எந்த தடையும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. கலெக்டர் உத்தரவுப்படி தாசில்தார் ஆனந்த மகாராஜன் நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் கூறியதாவது:

ஆய்வுக்கு பிறகே பள்ளம் ஏற்பட்டது குறித்த காரணம் தெரியவரும். அந்த பகுதியில் ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டதாக கூறினார்.

Share This Post

Post Comment