கருணாநிதி-ஸ்டாலின் மோதல்

karuna-stalin2-600-450x338திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரில் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திமுக நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்…

திமுகவின் முகமாக அரை நூற்றாண்டுகாலமாக கருணாநிதிதான் இருந்து வருகிறார். இப்போது திமுக என்றால் ‘தளபதி’ ஸ்டாலின் என்ற நிலை தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.

கருணாநிதியின் குடும்பத்தில் ஸ்டாலினுக்கு இணையாக மு.க. அழகிரியும் தன்னை முன்னிறுத்திப் பார்த்தார். ஆனால் இந்த யுத்தத்தில் அழகிரி தோற்றுப் போனார்.

அழகிரியைப் போலவே கனிமொழியும் தம் பங்குக்கு தலைதூக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரையும் ஓரம்கட்டி ஒதுக்குவதில் ஸ்டாலின் தரப்பு படுதீவிரமாக இருந்து வருகிறது. இதுதான் ஸ்டாலின் மீதான கருணாநிதியின் கோபத்துக்கு அடிப்படை காரணம் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

கடந்த வாரத்தில் நிகழ்ந்த 2 நிகழ்வுகள் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உச்சகட்ட மோதலை அம்பலப்படுத்தியது என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. திமுகவின் முப்பெரும் விழா கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. இந்த விழாவுக்கு கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் முன்னரே வந்துவிட்டனர். ஆனால் ஸ்டாலின் சுமார் 40 நிமிடம் தாமதமாக வந்திருக்கிறார்.

அப்போதே கருணாநிதி பயங்கர அப்செட்டாம்… இந்த விழாவில் பேசியவர்களும் ஸ்டாலினை தூக்கி வைத்து பேசினர்…. இந்த பேச்சுகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில்தான், நான் 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தில் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ந்தும் பணியாற்றுவேன். நான் இருந்து இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பேன். இன்னும் பல மடங்கு வெற்றிகளை இந்த இயக்கத்துக்கு பெற்று தருவேன். நான் இருக்கும் வரை அல்ல, இல்லாதபோதும் இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்பதற்கு என்னென்ன திட்டங்கள் தீட்ட முடியுமோ அதையெல்லாம் செய்துவிட்டுத்தான் இந்த கருணாநிதி போவான். என்னுடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள், பேராசிரியர் போன்றவர்கள் எடுத்து சொன்னாலும்கூட நான் ஓய்வு பெறமாட்டேன். மறந்தும்கூட நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன் என்று சொல்லமாட்டேன் என்று காட்டமாக பேசியிருக்கிறார்.


Related News

 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *