சிரியாவின் கூட்டா பகுதிக்கு சுமார் 40,000 மக்கள் திரும்பினர்

ekuruvi-aiya8-X3

sireya03சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக்குழுக்களை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. நிறுத்தியது. இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில், அதிபர் ஆதரவு படை – ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில்
போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன.
இதன் விளைவாக கிளர்ச்சியாளர்கள் ஆயிரங்கணக்கில் கிழக்கு கூட்டா பகுதியிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 1123 கிளர்ச்சியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் டொயுமா நகரத்திலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் கிழக்கு கூட்டா பகுதியிலிருந்து வெளியேறி வரும் நிலையில் சிரிய அரசாங்கம்  டமாஸ்கஸ் பகுதிகளில் போரை நிறுத்தி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்தது. இதன் விளைவாக சுமார் 40,000 க்கும் அதிகமான மக்கள் கிழக்கு கூட்டா பகுதிக்கு திரும்பியுள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளதாக இன்டர்பெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share This Post

Post Comment