காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

sonia-gandhi-video_647_022816120939காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி உரையை தொடர்ந்து ரெயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜே.என்.யு., ரோகித் வெமுலா உள்ளிட்ட விவகாரங்களால் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தொடர்பான சொத்து வழக்கு குறித்து பிரச்சனையை எழுப்பி அதிமுகவினர் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், திக் விஜய் சிங், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Share This Post

Post Comment