தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்

sushmaஆங்கிலம், இந்தியை தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மேலும் 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பிரதமர் அலுவலக செய்திகள் இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இதுவரை வெளியாகி வந்தது. இந்நிலையில், பிரதமர் அலுவலக இணையதளம், தமிழ் உள்ளிட்ட மேலும் 6 மொழிகளில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இனி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, மராட்டி மொழிகளிலும் பிரதமர் அலுவலக இணையதளத்தில் விவரங்களை படித்து அறியலாம்.

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இதனை தொடங்கி வைத்தார். www.pmindia.gov.in என்ற இணைய தளத்தில் பிரதமரின் அறிவிப்பு, பேச்சு ஆகியவற்றை படிக்கலாம்.

6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளத்தை தொடங்கி வைத்த சுஷ்மா சுவராஜூக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இதன் மூலம் அனைவருக்கும் என்னுடைய கருத்து சென்றடைய ஏதுவாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment