மின்னணு பண பரிவர்த்தனையை எளிதாக்க மொபைல் ஆப் விரைவில் அறிமுகம் – மோடி

ekuruvi-aiya8-X3

modi_2411ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்குப் பின் மின்னணு பண பரிவர்த்தனைகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. சாலையோரக் கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மின்னணு பண பரிவர்த்தனையை எளிதாக்க மொபைல் ஆப் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற டிஜி-தன் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் “இளைஞர்கள் மத்தியில் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இளைஞர்கள் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்து வருகின்றனர். இளைஞர்கள் மக்களிடம் பரவலாக இதுகுறித்து எடுத்துக் கூற வேண்டும்.

ஏழை மக்கள் பயனடையும் வகையில் மின்னணு பரிவர்த்தனைக்கான தொகை குறைப்பு. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ரொக்கமற்ற பண பரிவர்த்தனை பெருக வேண்டும். மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வைகையில் அடுத்த 100 நாட்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும்

அம்பேத்கரை பெருமைப்படுத்தும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிதாக்க  ‘பீம்’ என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும். அம்பேத்கரின் சேவைகளை சிறப்பிக்கும் வகையில் மொபைல் செயலிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உன்னத திட்டமாக ‘பீம்’ திட்டம் பார்க்கப்படும்.

ஜனநாயக நாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பொருளாதாரத்திற்கு அடித்தளமிட்டவர் அம்பேத்கர். அம்பேத்கர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் ஆவார். ‘பீம்’ என்ற செயலி மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் நடைபெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. உலகின் மிகப்பெரிய உன்னத திட்டமாக ‘பீம்’ திட்டம் பார்க்கப்படும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்பதால் இத்திட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இணையதள சேவை இல்லையென்றாலும் டிஜிட்டல் வர்த்தகம் சாத்தியமாகும்” என்றார்.

Share This Post

Post Comment