பண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் – பிரதமர் மோடி

ekuruvi-aiya8-X3

modiலோக்சபாவுக்கும், அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் தேதிகள் பண்டிகைகளை போல நிர்ணயிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகள் பிரசார பணிகளிலும், அதிகாரிகள் தேர்தல் பணியிலும் ஆண்டு முழுவதும் ஈடுடத் தேவையில்லை. மேலும், பணமும், நேரமும் மிச்சமாகும்.

இதே போல் லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும். இத்திட்டம் என்னுடையதோ அல்லது பா.ஜ.,வுடையதோ அல்ல. இது தொடர்பாக அனைவரும் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment