ரூபாய் நோட்டு பிரச்சனை: நள்ளிரவில் அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

Facebook Cover V02

modi_rajnathமத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளில் நடைபெறும் பண பரிமாற்றம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் நிதி அமைச்சக துறையின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

ஆலோசனை கூட்டம் குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் கூறியதாவது:-

பல்வேறு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் நடைபெற்று வரும் பண விநியோகம் மற்றும் தேவை குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.

பண விநியோகத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள். வங்கி தாளாளர்கள் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். வங்கி தாளாளர்கள் ஒரே நாளில் பலமுறை பணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment