மோசமாக வாகனம் ஓட்டுவதில் கில்லாடிகளாம் பிரிட்டிஷ் கொலம்பியாக்காரர்கள் !!

ekuruvi-aiya8-X3

எந்த போக்குவரத்து விதிமுறைகளையும் மதிக்காமல், என்னவெல்லாம் வாகனம் ஓட்டும்  போது செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்து கொண்டே வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்த மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்ட பகுதியாக பிரிட்டிஷ் கொலம்பியா தேர்ந்தெடுகக்பப்ட்டுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சராசரியாக 58 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியா வாகன ஓட்டுனர்கள் விதிமுறைகளுக்குப் புறம்பாகவே வாகனங்களை இயக்குகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

61 விழுககட்டிற்கும் மேற்பட்டோர் நிற்க வேண்டிய சந்திப்புக்களில் நின்று செல்வதில்லை. மேலும் பெரும்பான்மையானோர் விபத்துக்களின் போது தங்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காக திடிரென பிரேக்கை அழுத்துவதையும் , ஸ்டியரிங்கை முறுக்கிக் கொண்டு பறப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் குறிப்பாக வன்குவர் பகுதி மக்கள் பெரும்பாலானோர் சிக்னல் போடாமல் வண்டிகளைத் திருப்புவது, எங்கெல்லாம் வாகனங்களை நிறுத்தக் கூடாதோ அங்கெல்லாம் சாதாரணமாகச் சென்று பார்க்கிங் விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வாகனங்கள் நிறுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.shutterstock_357941573-984x500

Share This Post

Post Comment