மான்செஸ்டர் தாக்குதலில் மொபைல் போனால் உயிர்பிழைத்த பெண்

Thermo-Care-Heating

monster_mobileகடந்த திங்களன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதுடன் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதையடுத்து மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அந்த சம்பவத்தின் போது செல்போனால் பெண் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற போது, லிசா என்பவர் செல்போன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரும்பு துண்டு சிதறி லிசாவின் மீது விழுந்துள்ளது. ஆனால் இவர் செல்போன் பேசிக்கொண்டிருந்ததால், அந்த இரும்பு துண்டானது செல்போனின் மீது பட்டது. லிசாவை நேரடியாக தாக்கவில்லை.

மாறாக அவரது காது, மூக்கு, கன்னம்போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

அந்த இரும்புத்துண்டு லிசாவை நேரடியாக தாக்கியிருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

HondaAd_mar-2

Honda March

 

 

ideal-image

Share This Post

Post Comment