சிலர் மின்தடை குறித்து பேசுவது வேடிக்கையாகவுள்ளது!

ekuruvi-aiya8-X3

sampikkaமின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தரம் குறைந்த மின் கட்டமைப்புகளை நிர்மாணித்து பல கோடி ரூபாய்களை கொள்ளையிட்ட மோசடியாளர்கள் தற்போது மின்சார தடை குறித்து பேசுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் பல கோடி ரூபா நிதியை கொள்ளையிட்டவர்களும், ஊழல் அதிகாரிகளும் இவ்வாறு பேசுவது பெரிய அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகம நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பஸ் தரிப்பிடத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை இன்று ஆரம்பித்து வைத்து பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் கட்சி அரசியல் இல்லை. கட்சி அரசியல் என்ற இருண்ட யுகத்திற்கு மீண்டும் நாட்டை இட்டுச் செல்லும் தேவை சிலருக்கு உள்ளது எனவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment