மிதக்கும் காற்றாலை தண்ணீரில் மின்சாரம் எடுக்க திட்டம்!

finalthemo

Englaland-world-first-wind-water-elecநிலக்கரி, காற்று போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி, காற்று போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தற்போது தண்ணீரில் இருந்து காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மிதக்கும் காற்றாலை என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து கடலில் அமைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் படகில் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது.

அதன் அடியில் கடலுக்குள் மிக உயரமான டர்பன்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கடல் நீரை சுழற்றும் போது காற்றாலையின் காற்றாடி சுற்றும் அதன் சக்தியில் மின்சாரம் உருவாகிறது. இதற்கு ‘ஹைவின்ட்’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த மின் திட்டத்தை நார்வேயை சேர்ந்த ஸ்டேடோயில் நிறுவனம் நடைமுறைப்படுத்துகிறது. இதன் பரிசோதனை ஓட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன் மூலம் 20 ஆயிரம் வீடுகளுக்கு மின் சப்ளை வழங்க முடியும்.

இந்த தகவலை ஹைவின்ட் திட்ட இயக்குனர் லீப் டெல்ப் தெரிவித்தார். இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் செலவு குறையும் என தெரிவித்தார்.

‘ஹைவின்ட்’ திட்டத்தில் பயன்படுத்தப்படும் டர்பைன்கள் லண்டனில் உள்ள ‘பிக்பென்’ கடிகார கோபுரத்தை விட மிக உயரமானது.

அதாவது பிக்பென் கோபுரம் 96 மீட்டர் உயரம் உடையது. ஆனால் ஹைவின்ட் டர்பைன்கள் 175 மீட்டர் உயரமானவை. இதன் மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது உலகின் முதல் மிதக்கும் காற்றாலையாகும்.

Share This Post

Post Comment