மின்சார சபையின் தலைவர் பதவி விலகத் தீர்மானம்

ekuruvi-aiya8-X3

anura wijiyabalaஇலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு பதவி விலகத் தீர்மானித்துள்ளார். கடந்த 17 நாட்களில் இரண்டு தடவைகள் நாடு முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மூன்று தடவைகள் நாடு முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்சாரத் தடைகளுக்கான பொறுப்பினை எற்றுக் கொண்டு பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையை சீர் செய்ததன் பின்னர் தாம், அமைச்சரிடம் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்க உள்ளதாக அனுர விஜேபால தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment