மூழ்கியது மூன்றாம் பிறை க.சிவமணி

ekuruvi-aiya8-X3

ஸ்ரீதேவியின் மரணம் பற்றி  நிறையப் பேசபப்டுகிறது. ஆரம்பத்தில் அய்யகோ என்றவர்கள் எல்லாம்  அவர் இரத்தத்தில் மது கலந்திருப்பது தெரியவந்ததும்  நிறையவே பொங்கிவிட்டார்கள். எனது கனவுக்கன்னி மதுவுக்கு அடிமையானவளா என்பதை எந்த ரசிகனாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.  அதுவே அவரின்  உடலுக்கு ஏன் தேசியகொடி எsridevi_0ன்ற கேள்வியோடு  ஸ்ரீதேவியெனும் கலைஞியின் பயணம் முடிந்திருக்கிறது.

டுபாயில்  குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து ஸ்ரீதேவி இறந்ததைப் போலவே   அமெரிக்க பொப் பாடகியான விட்னி  ஹூஸ்டனின் மரணமும் குடிபோதையில் குளியல் தொட்டியிலேயே லாஸ் ஏஞ்சல் நகரில் நடந்தது.

விட்னி ஹூஸ்டன் 2012ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தனது 49வது வயதில் மரணமடைந்தார். நீர் நிரப்பப்பட்ட குளியலறை நீர்த்தொட்டியில் மூழ்கிய நிலையில் விட்னி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் . தற்செயலாக நீரில் மூழ்கி விட்னி இறந்ததாக பின்னர் தடயவியல் சோதனையில் தெரிவிக்கப்பட்டது.

sridevi  கிட்டத்தட்ட ஸ்ரீதேவியும் அதே பாணியில் மரணமடைந்துள்ளார். அதே  பிப்ரவரி மாதத்திலேயே  ஸ்ரீதேவியின் மரணமும் அவரது 54வது வயதில் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீதேவியும் நீர் நிரப்பப்பட்ட குளியலறை தொட்டியில் மூழ்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.  பின்னர் ஸ்ரீதேவியும் மரணமும் தற்செயலாக நடந்ததாகவே ஐக்கிய அரபு இராச்சியத்தின் தடயவியல் சோதனை கூறுகிறது.

இருவரது மரணத்திலும் சூழல்கள் குழப்பமாகவே உள்ளது. அதாவது விட்னி ஹூஸ்டன்  எப்படி நீர்த்தொ ட்டியில் மூழ்கினார் என்பது தெரியவில்லை. அதேபோலத்தான் ஸ்ரீதேவி மூழ்கியதிலும் குழப்பம் நிலவுகிறது. இக் கேள்விகளுக்கெல்லாம்  காலம்தான் பதில் சொல்வேண்டுsrideviம்.  ஸ்ரீதேவியின் மரணத்திற்குச் சொல்லப்பட்டிருக்கும் குளியல் தொட்டிக்  காரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. உறவினரின் திருமணத்துக்குச் சென்றவர், இந்தியக் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட ஒருவர்  போதை நிரம்பி வழியும் அளவுக்கா  மது அருந்தியிருப்பார் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்?

முதலில் ஒரு தனிமனுஷியின் வாழ்வில் நடந்தேறிய விடயங்களை நாம் கேள்வி கேட்க முடியாது அவரின் அன்றாட பழக்க வழக்கங்கள் நம்மை அல்லது சமூகத்தைப் பாதிக்காதவரையில் நாம் யார் அவரின் சொந்த விடயங்களைப் பற்றி பேசமுடியும்?.

ஐம்பது வருடங்கsridevi251ளுக்கு முன் ஒரு சாதாரண கிராம பின்னணியில் பிறந்து  ஆதிக்கங்கள்  நிறைந்த சினிமாவில் நுழைந்து தன் மழலை மொழியில் நம்மை கட்டி போட்டு தனித்துவத்தோடு நிலைநின்று  கன்னியாய் அறிமுகமாகிய ஓர் கனவு தேவதை  ஸ்ரீதேவி. இவரின் கவர்ந்திழுக்கும் அழகும் அதோடு கூடுய சிறந்த நடிப்பு திறனும் அன்றைய பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுவதற்கு பெரிதும் உதவியது.  ஸ்ரீதேவி என்ற நடிகையின்

உழைப்பும் திறமையும் மட்டுமே சில நடிகர்களை சூப்பர் ஸ்ரார்   அந்தஸ்திற்கு உயர்த்தியதென்றால் அது மிகையில்லை.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியென பல மொழிப் படங்களிலும் தவிர்க்க முடியாத முக்கிய வெற்றிக் கதாநாயகியாகத்  திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.

ekuruvi_night-2018கதாநாயனுக்கு இணையாக ஸ்ரீதேவிக்கும் கட்அவுட் வைக்கப்பட்டு சினிமாவால் கொண்டாடப்பட்ட கலைஞியின் திறமையை பல தடவைகள் சரியாக அங்கீகரிக்கத் தவறியிருக்கிறது  இந்திய அரசு.  அவரோடு இணைந்து நடித்தவர்களை எல்லாம் கௌரவப் படித்திய சம்பவங்களும் இதியச் சினிமாவில் நடந்திருப்பது என்னவோ  உண்மைதான். உதாரணமாக  மட்டக்களப்பு இந்தியச் சினிமாவிற்கு கொடுத்த சிற்பி திரு.பாலுமகேந்திராவின் “மூன்றாம்பிறை”  திரைப்படம் 1982ம் ஆண்டு வெளிவந்தபோது  அத்திரைப்படத்தில்  கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் பாலுமகேந்திராவிற்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கொடுத்த தேசிய விருதுக்குழு ஸ்ரீதேவியை ஏனோ நினைக்கத் தவறிவிட்டது.

ஸ்ரீதேவியின் இந்தி நுழைவு அதுவரை தென்னகத்திலிருந்து சென்ற சில தமிழ்  நடிகைகளைப்போல இல்லாமல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் சினிமாக்கள் வசூலில் புதிய உச்சத்தை தொட்டதெல்லாம் அப்போது பேசபட்டது.

அசாதாரண சூழலில் இருந்து உச்சத்தை தொட்டு நம்மை மகிழ்வித்த பெண் கலைஞி ஸ்ரீதேவி.   அழகும் கவர்ச்சியும் மட்டுமே உயரத்திற்கு கொண்டு செல்லாது மாறாக சினிமாவிற்கான அசாத்திய திறமை மிக முக்கியம் என்பதை முன் நிறுத்திய அந்த திறமையாளர் ஸ்ரீதேவி. அப்படியான ஒரு கலைஞியின் பூதவுடலுக்கு  இன்று  அரச மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது. குடிபோதையில் இறந்தவருக்கு அரச மரியாதை எதற்கு? கூத்தாடிக்கு ஏன் தேசிய மரியாதை என்றெல்லாம் விவாதங்கள் அனலாகப் பறக்கின்றன.   ஸ்ரீதேவி அரசியல் தலைவர்களை போல பொய்பேசி திரியவில்லை, மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதை நியாயபடுத்தவில்லை. ஏன் எத்தனையோ தலைவர்கள் மது அருந்திவிட்டு. கவர்னர் மாளிகையிலேsridevi26யே கூத்தடித்திருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் மரணம் கைகூடிய போது அரசு மரியாதை செய்திருக்கிறது.

ஆனால் ஸ்ரீதேவிக்குக் கொடுக்கப்பட்ட இறுதி அரச மரியாதையை  மட்டும் நாம் விமர்சிப்போம்.

காலங்கள் கடந்தாலும் சினிமா உலகத்தினரால் பெருமையாக பேசப்படப்போகும்  பெண்மணி ஸ்ரீதேவி. மூழ்கினாலும் ஒவ்வொரு ரசிகனுக்கும் அவர் மூன்றாம் பிறையே.

மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில் க.சிவமணி அவர்களால் எழுதப்பட்டது

Share This Post

Post Comment