இந்தியாவில் மின்னல் தாக்கி 80 பேர் உயிரிழப்பு

Thermo-Care-Heating

weather_lightningகடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில், கிட்டத்தட்ட 80 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்துள்ளவர்களில் பெரும்பாலானோர், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

தொடர்ந்து பருவ மழை பெய்துவரும் நிலையில், விவசாய நிலங்களில் இவர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போது மின்னலால் தாக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற ஒரு குறுகிய காலத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிகமானோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவெங்கும் நடந்த மின்னல் தாக்குதல்களால், ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

எப்போது, எங்கு மின்னல் தாக்குதல் நடக்கும் என்பதனை கணிப்பது மிகவும் கடினம் என்பதால், மின்னல் தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் குறிப்பாக எச்சரிக்கை தருவது சிரமமாகும்.

ideal-image

Share This Post

Post Comment