பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகளுக்கு தூக்கு ராணுவ தளபதி உறுதி செய்தார்

ekuruvi-aiya8-X3

Military-commanderபயங்கரவாதிகள், முகமது இஸ்டாக், முகமது ரபீக், முகமது ஆரிஷ், ஹபிபுர் ரகுமான், முகமது பயஸ், இஸ்மாயில் ஷா, முகமது பசல், ஹஸ்ரத் அலி, முகமது ஆசிம், ஹபிபுல்லா ஆவார்கள்.

இவர்கள் அங்கு 62 பேரை கொன்று குவித்தவர்கள் என அந்த நாட்டின் ராணுவ ஊடகப்பிரிவு சொல்கிறது.

குறிப்பாக முகமது இஸ்டாக்கும், முகமது ஆசிமும் சேர்ந்து பாகிஸ்தானின் சுபி மத இசைக்கலைஞரான அம்ஜத் சப்ரியையும், சட்ட அமலாக்கல் பிரிவினரையும் கொன்றவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

இவர்களுக்கு ராணுவ கோர்ட்டு விதித்த மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்து உள்ளார்.

எனவே 10 பயங்கரவாதிகளும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Share This Post

Post Comment