கணனி பிரச்சனையால் பாதிப்புக்குள்ளான ரொறன்ரரோ சேவை

ekuruvi-aiya8-X3

canada-09081டெல்ரா விமான சேவைகளின் கணனி சேவைகள் செயலிழந்தைமையால் சர்வதேச அளவிலான பல விமான சேவைகளின் விமான போக்குவரத்துகள் நேற்று காலை தடைப்பட்டடன. இதனால் ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன.

நேற்று காலை ஏற்பட்ட இந்தப் பாதிப்பினால் குறிப்பாக ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 60 விமானங்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டன. எனவே அதன் மூன்றாம் முனையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர் என அவ்விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமான போக்குவரத்தின் தாமதம் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை மீள பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே பலர் தமது பணத்தை மீளப்பெற்றுக் கொண்டனர். எனினும், இன்னும் பலருக்கு பயணத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டமையினால் மிகவும் இன்னல் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அட்லான்டாவில் ஏற்பட்ட மின் செயலிழப்பே இந்நிலைமை ஏற்படுவதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment