மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

ekuruvi-aiya8-X3

Mettur-Dam_மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை வாய்க்கால்களில் இருந்து, எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காக முதல் கட்டமாக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 17-11-17 முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும், இதை தவிர மேலும் மூன்று கட்டங்களாகவும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment