மெர்சிடிஸ் பென்ஸ் சுதந்திர தின செலபிரேஷன் எடிஷன் GLC அறிமுகம்

ekuruvi-aiya8-X3

benz-celebration-edition._இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் செலபிரேஷன் எடிஷன் GLC மாடலினை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. லிமிட்டெட் எடிஷன் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும் GLC220d விலை ரூ.50.86 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இதேபோல் GLC 300 விலை ரூ.51.25 லட்சம் முதல் துவங்குகிறது.

புதிய வெளியீட்டின் மூலம் மெர்சிடிஸ் தயாரிப்பில் டிசைனோ ஹேசிந்த் ரெட் எனும் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் எல்இடி லோகோ ப்ரோஜெக்டர், ஸ்போர்ட்ஸ் ஃபினிஷ் பெடல், கார்மின் மேம் பைலட் எஸ்டி கார்டு, ஹை-ஷீன் க்ரோம்டு ட்ரிம் மற்றும் பின்புற ட்ரிம் ஸ்ட்ரிப்கள் காரின் தோற்றம் வழக்கத்தை விட மேலும் அழகாக காட்சியளிக்கிறது.

Mercedes-Benz-launches-GLC-celebration-edition-in-Indiaஇந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GLC பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டது. 220d மாடலில் 2143 சிசி டீசல் இன்ஜின் 170 bhp, 400 Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. இதேபோல் GLC 300 மாடலில் 1991 சிசி இன்ஜின் 245 bhp, 380 Nm செயல்திறன் கொண்டுள்ளது.

இரண்டு இன்ஜின்களிலும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் 4MATIC ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆப்ஷன்களும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC பி.எம்.டபுள்டூ X3 மற்றும் ஆடி Q5 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

Share This Post

Post Comment