மேம்படுத்தப்படும் பிரிட்டனின் அரண்மனைகள்

Facebook Cover V02

பிரிட்டிஷ் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லங்களான விண்ட்ஸர் கேசில், ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைகளில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கக்கூடிய இடங்கள் சுமார் 370 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவிருக்கின்றன.

விண்ட்ஸர் கேசில் அரண்மனை மேம்படுத்தப்பட்டால், சுற்றுலாப் பயணிகள் மேலும் பல இடங்களைப் பார்க்க முடியும்.
விண்ட்ஸர் கேசில் அரண்மனை மேம்படுத்தப்பட்டால், சுற்றுலாப் பயணிகள் மேலும் பல இடங்களைப் பார்க்க முடியும்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்ட்ஸர் கேசிலில் புதிதாக ஒரு சிறிய உணவகம் ஒன்று கட்டப்படவிருக்கிறது.

எடின்பரோவில் உள்ள ஹோலிரூட் ஹவுசைச் சுற்றியுள்ள பகுதிகளும் மேம்படுத்தப்படவிருக்கின்றன.

இந்த மேம்படுத்தலுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் அரச குடும்பத்தினர் வரும் வாயிலைப் பார்க்க முடியும்.
இந்த மேம்படுத்தலுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் அரச குடும்பத்தினர் வரும் வாயிலைப் பார்க்க முடியும்.

பிரிட்டின் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லங்களான இந்த இரண்டு அரண்மனைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும்பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

விண்ட்ஸர் கேசில் அரண்மனையில் நுழைவுவாயிலை அடுத்து இருக்கும் அறை முன்பிருந்த வகையிலேயே மாற்றப்படும். தரைத்தளத்தில் இருக்கும் அரச குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளைக் கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியும்.

எடின்பரோவில் உள்ள ஹோலிரூட் ஹவுஸ் அரண்மனை
எடின்பரோவில் உள்ள ஹோலிரூட் ஹவுஸ் அரண்மனை

14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விண்ட்ஸர் கேசில் அரண்மனையில், சில வருடங்களுக்கு முன்பாக பரீட்சார்த்த முறையில் சிறிய உணகவம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது, அந்த உணவகம், அதன் கீழ் தளத்தில் இந்த உணவகம் அமைக்கப்படும். முந்தைய காலகட்டங்களில் ஒயின் உள்ளிட்ட அரண்மனைக்குத் தேவையான பிற பொருட்கள் இங்குதான் வைக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்தமாக இந்த அரண்மனையில் 27 மில்லியன் பவுண்டுகள் இதற்கென செலவிடப்படும்.

ஹோலிரூட் ஹவுசில் செய்யப்படும் பணிகளுக்காக 10 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அரண்மனைகளைப் பார்க்க தற்போது வருடத்திற்கு 15 லட்சம் பேர் வரை வருகின்றனர்.
இந்த அரண்மனைகளைப் பார்க்க தற்போது வருடத்திற்கு 15 லட்சம் பேர் வரை வருகின்றனர்.

இந்த அரண்மனைக்கு வெளியில் உள்ள ஹோலிரூய் அபி, மைதானம், முகப்பு வளாகம் ஆகியவை ஹிஸ்டாரிக் என்விரான்மெண்ட் ஸ்காட்லாண்ட் அமைப்புடன் இணைந்து மேம்படுத்தப்படும். ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறது.

பல நூற்றாண்டுகளாகவே விண்ட்ஸர் கேசிலுக்கும் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கும் மக்கள் பார்வையிடுவதற்காக வருகிறார்கள். இப்போது வருடத்திற்கு 15 லட்சம் பேர் இந்த அரண்மனைக்கு வருகிறார்கள்.

அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் இதற்கான பணிகள் துவங்கி, 2018ல் பணிகள் நிறைவடையும். அந்த காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து அரண்மனைகளைப் பார்க்க முடியும்.

Share This Post

Post Comment