பேய் விரட்டும் அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா

mx6jdv72நமீதா.gifதம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை  படங்களின் இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில்,  ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகும்  படம் பொட்டு.

இந்தப் படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

இனியா ஆதிவாசி பெண்ணாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய பாத்திரத்தில் அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா
நடிக்கிறார்

கொல்லி மலையைச் சேர்ந்த ஒரு ஆதிவாசி பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. அவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். அது தற்கொலை என சொல்லப்பட்டு அந்த ஸீட் கோடி கணக்கில் விலை பேசப்படுகிறது.

’இறந்த ஆதிவாசிப் பெண் ஆவியாக வந்து எப்படி பழி தீர்க்கிறாள்?’-என்பதுதான் மீதி கதையாம்.

பொட்டு என்ன மாதிரியான படம் என்று இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:-

இது பரபரப்பான பேய் படமாக இருக்கும். மருத்துவக் கல்லூரி பின்னணியில் கதை அமைந்துள்ளது. சமீபத்தில் கொல்லிமலையில் படப்பிடிப்பை நடத்தினோம். ஆதிவாசிகள், பழங்குடிகள் பகுதியில் நடக்கும் காட்சி ஒன்றை படமாக்கினோம். இதற்காக கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் உயர மலைப் பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டது.  இந்தக் காட்சியில் நமீதா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்.

நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது. வண்டி எதுவும் போகாது. 4 கிலோ மீட்டர்  எல்லோரும், எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்துச் சென்று படமாக்கினோம் என்று கூறினார்


Related News

 • உலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்
 • ஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை என்கிறார் சமந்தா
 • ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
 • கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
 • சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
 • ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
 • 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
 • விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *