இலங்கையிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில்!

Facebook Cover V02

amaraveeraநல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின்கீழ் இலங்கையிலேயே மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளது. இது வடக்கின் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

அண்மையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கீரிமலைத் துறைமுகத்தில் அரசாங்கம் மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்துக்களின் புனித இடமான கீரிமலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. வேறு தரப்பினர் யாராவது எடுத்தார்களா என்பது குறித்தும் எமக்குத் தெரியவில்லை.

வடக்கின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இலங்கையிலேயே மிகப்பெரிய துறைமுகம் ஒன்றை பருத்தித்துறையில் அமைக்கவுள்ளோம். இதனைத் தவிர குருநகர் பிரதேசத்தில் மற்றுமொரு மீன்பிடித்துறைமுகத்தை அமைக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment