மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு சுமந்திரனும் இந்தியா பறக்கிறார்!

Facebook Cover V02

sumanthiranமீனவர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா புறப்படும் அமைச்சர்கள் மட்டக் குழுவில் முதன் முறையாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொள்ளவுள்ளார்.

சிறீலங்காத் தரப்பினது குழுவின் ஒரு உறுப்பினராக இவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களில் பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இழுவைப்படகு மீன்பிடி முறையைத் தடை செய்யும் தனிநபர் பிரேரணை ஒன்றை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment