மீனவர் பிரச்சினை தீரும்வரை இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது!

ekuruvi-aiya8-X3

karunanithiஇலங்கைச் சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர், இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தக் கூடாது, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும் எனவும் கருணாநிதி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதுவரை, இலங்கை அரசுக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது. இது தான் தமிழ் மக்களின் கோரிக்கை. இதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment