உடல் எடை குறைய லெமன் ஹனி

Facebook Cover V02

lemonhoneyதினம் அதிகாலையில் எழுந்து முகம் கழுவி பல் துலக்கிய அடுத்த நிமிடம்  நிறம், மணம், திடத்துடன் எவர் சில்வர் டபராவிலோ, டம்ளரிலோ கொஞ்சம் மாடர்னாக பீங்கான் கோப்பைகளிலோ காப்பியோ, டீயோ அருந்துபவரா நீங்கள்?  ஆம் எனில் அப்படி ரசித்து ருசித்து திடமான  காப்பி / டீ அருந்தும் வைபவத்தை 1 மணி நேரத்துக்கு ஒத்திப் போடுங்கள்.

விடிந்ததும் வெறும் வயிற்றுக்குள் இப்படியான லாஹிரி வஸ்துக்களை இறக்காமல் முதலில் அருந்தும் பானமாக அரை மூடி லெமன் ஹனி என்று பழக்கப்படுத்திக் கொள்வது நமது உடல் நலனுக்கு மிகவும்  நல்லதாம்.

தேவையான பொருட்கள்

லெமன் – அரைமூடி
வெது வெதுப்பான தண்ணீர் –  1 கப் (சற்றுப் பெரிய கப்பாக தேர்ந்தெடுக்கவும்)
ஹனி – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

அதிகாலையில் எழுந்ததும் ஒரு பெரிய கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதை கொதிக்க விடாமல்  மிதமான சூட்டில் இறக்கி அரை மூடி லெமன் பிழிந்து 1 டீ ஸ்பூன் ஹனி  கலந்து அப்படியே அருந்தலாம்.

பலன்கள்

இப்படித் தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் எடை குறைவதோடு முதல் நாள் நாம் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்களினால் நமது உடலில் தேங்கும் நச்சுப் பொருட்களும் லெமன் ஹனியால்  கரையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு காப்பிக்குப் பதில் இதை அருந்திப் பாருங்கள் உடல்நிலையில் மனநிலையிலும் நிச்சயம் மாறுதல் தெரியும்.

 

Share This Post

Post Comment