மூலநோயிலிருந்து விடுபட கருணைக்கிழங்கு

ekuruvi-aiya8-X3

karunai_kizhankuகருணைக் கிழங்கு. மூல நோயைக் கட்டுப்படுத்த கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது.அதிக உடல் எடை, மூட்டுவலி, முதுகுத் தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படுவோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது

ஆசன வாயில் ஏற்பட்டுள்ள மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.  ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மட்டும் வேக வைத்து, அப்படியே உணவாகச் சாப்பிட்டு வந்தால், மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை வேக வைத்து, எண்ணெய், உப்பு மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

மற்ற கிழங்குகளைவிட கருணைக் கிழங்கு சுலபமாக ஜீரணமாவதால், வயிற்றில் வாயுக் கோளாறைப் போக்கும். பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது, குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது,

மூல முளையைச் சுருங்க வைத்து வேதனையைக் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள். கருணைக்கிழங்கு லேகியமாகவும் செய்து சாப்பிட்டு வரலாம்.

Share This Post

Post Comment