ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் உணவு வகைகள்

ekuruvi-aiya8-X3

asthmaaஆஸ்துமா எவ்வா வருகிறது? தூசிகள் நிறைந்த சுற்றுப்புறத்தில் இருந்தாலும் ஆஸ்துமா வரும். இது நாள்பட்ட சுவாக மற்றும் நுரையீரல் கோளாறு, பரம்பரையினாலும் ஏற்படும்.

ஆஸ்துமா ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனை. இன்றைய காலத்தில் நிறைய பேர் இந்த சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல், இந்த ஆஸ்துமாவிற்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் இல்லை.

இருப்பினும், அவற்றை முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் தற்போது திடீரென்று வரும் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த ஆஸ்துமா பம்ப் மார்கெட்டில் வந்துள்ளது. ஆனால் ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, சூடான நீரில் தேன் ஊற்றி, நுகர்ந்தால் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தலாம். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்து வந்தாலும், கட்டுப்படுத்த முடியும்.

வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட்டால், ஆஸ்துமா குணமாகும். அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா நோயாளிகள் நாள்பட்ட சுவாசக் கோளாறை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். அதிலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ஆஸ்துமாவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.எந்நெந்த உணவுகளை ஆஸ்துமா உள்ள நோயாளிகள் சாப்பிடாலாம் என தெரிந்துக் கொள்வோம்.

பால் பொருட்கள்

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கும். எனவே அத்தகையவர்கள் அதிகமான அளவில் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இது ஆஸ்துமாவிற்கு மட்டுமின்றி, சருமம் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நல்ல அளவில் உள்ளதால், அது சுவாசக் கோளாறை குணப்படுத்தி, சரியான செயல்பட வைக்கும். எனவே ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான மீன் மற்றும் மீன் எண்ணெயை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

சிவப்பு குடைமிளகாய்

இதில் நுரையீரலை நன்கு செயல்பட வைக்கும், வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்துள்ளது.

பாகற்காய்

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, ஆஸ்துமா நோயாளிகளுக்கும் தான் நல்லது. எனவே தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, ஆஸ்துமா கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

காலிஃப்ளவர்

இந்த பச்சை இலை காய்கறியில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமங்கள் நல்ல அளவில் நிறைந்துள்ளன.

கிவி

கிவியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நுரையீரலில் இருக்கும் வீக்கம், அலர்ஜி போன்றவற்றை சரிசெய்யும்.

ஆரஞ்சு

நுரையீரலில் வீக்கங்கள் அதிகரித்தால், அது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது வீக்கத்தை குறைக்கும்.

பசலைக் கீரை

ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், பசலைக் கீரையை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமானதும், ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருள்.

கேல்

கேல் கீரையில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளதால், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த கேல் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Share This Post

Post Comment