பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் தெரியமா?

ekuruvi-aiya8-X3

fruitsபழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. நொறுக்கு தீனிகளுக்கு மாற்றாக பழங்களை ருசிக்கலாம். அதேவேளையில் பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிலுள்ள ஊட்டச்சத்துகளின் பலன் உடலுக்கு கிடைக்காது். குறிப்பாக பால் மற்றும் தயிர் போன்றவற்றுடன் சேர்த்து பழங்களை சாப்பிடக்கூடாது.

பழங்களை காலை வேளையில் சாப்பிடுவதுதான் சிறந்தது. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். அதேவேளையில் சிட்ரஸ் வகை பழங்களை காலைவேளையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை அசிடிட்டி பிரச்சினையை ஏற்படுத்திவிடும். வாழைப்பழங்கள், மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றை காலை நேரத்தில் சாப்பிடலாம்.

முலாம்பழம், தர்ப்பூசணி போன்றவைகளை மற்ற எந்த உணவு பதார்த்தங்களுடனும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதிலிருக்கும் அதிகபடியான நீர்ச்சத்து உணவு வகைகளுடன் சேர்ந்து செரிமானம் ஆவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். பருவ காலங்களுக்கு ஏற்ப பழ வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் பழங்கள் சாப்பிடுவதை தவிக்க வேண்டும். சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிடுவது செரிமானத்தை தாமதப்படுத்தும். குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உணவுக்கு இடையே இடைவெளி அவசியம். இல்லாவிட்டால் வாயு தொல்லை, மலச்சிக்கல், வயிற்று தொந்தரவு ஏற்படக்கூடும்.

Share This Post

Post Comment