காபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா?

காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. தினமும் இரண்டு கப் காபி பருகுவதன் மூலம் கல்லீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக 63 ஆயிரம் காபி பிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்டுகளாக அவர்கள் பருகும் காபியின் அளவு பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதில் 114 பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள்.

Coffee-protect-liverஇதையடுத்து காபி அதிக அளவிலும், குறைந்த அளவிலும் பருகுபவர்களை தரம் பிரித்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இறுதியில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

அதேவேளையில் டீ, பழ ஜூஸ் போன்ற பானங்கள் பருகுவதற்கும் கல்லீரல் அழற்சி நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுதான் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் அமெரிக்கர்கள்தான் கல்லீரல் அழற்சி நோயால் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.






Related News

  • கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி
  • ஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
  • கண்களை பாதுகாக்க சில எளிய யோசனைகள்
  • காபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா?
  • கொசுவினால் ஏற்படும் கொடிய நோய்கள்
  • மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி செரீனா வில்லியம்ஸ் பாடல்
  • பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்
  • மன அழுத்தத்தை போக்க சவப்பெட்டி சிகிச்சை ?
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *