சொரியாசிஸ் என்றால் என்ன ?

Thermo-Care-Heating

soriyasisசொரியாசிஸ் (Psoriasis) எவ்வாறு காணப்படும் ?

  • சொரியாசிஸ் என்பது தோலில், பொடிந்து விழும் புரையுடன் கூடிய சிவப்பு திட்டுகிகளாகக் (patches) காணப்படும்.
  • உடலின் எந்தப்பாகமும் தாக்கப்படலாம்.
  • முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படும.

சொரியாசிஸ் தொற்றும் தன்மையுடையதா ?

  • சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்கு பரவாது.
  • குறைந்த சுகாதாரத்தின் காரணமாக இது ஏற்படாது.

சொரியாசிஸை எது ஏற்படுத்தும் ?

  • சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் இணைப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
  • சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 1/4 – 1/3 பங்கினர் அதே நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே ! சிலர் விசயங்களில் மரபு நிலை பங்காற்றுகிறது.
  • உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் உறார்மோன்ஸ், சில ஆண்ட்டிஹைபர் டென்சிவ் போன்ற சில மருந்துகள், சொரியாசிஸை மேலும் மோசமாக்கும்.
  • குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்த கடினமாக்கும்.

சொரியாசிஸ் பிற சூழ்நிலைகளுடன் தொடர்புடையதா ?

  • ஏறத்தாழ 5% சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் ஏற்படும்.
  • சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், வண்ணமாற்றத்தையும், நகங்கள் தடிப்பையும் ஏற்படுத்தும்.

சொரியாசிஸ் யாருக்கு வரும் ?

  • சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கும்.
  • சொரியாசிஸ் வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
  • ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு கால மாற்றங்கள் ஏற்படும்.

சொரியரிசிஸுக்கு என்ன மருத்துவங்கள் கிடைக்கின்றன ?
1. மேற்பூச்சுக்கள் (creams)

  • இவற்றுள், ஈரப்படுத்துவன (mositurisers), கரி எண்ணை டித்ரானால் (dithranol), கால்சிபாட்ரியல் (calcipatriol) டாபிகல் ஸ்டீராய்ட்ஸ் அடங்கும்.
  • சொரியாசிஸால்கள் பெரும்பாலான மக்கள் லேசான நோயைப் பெற்று, டாபிகல் கிரீம்களைப்பயன்படுத்துவதால் நல்ல நிவாரணத்தைப் பெறுகிறார்கள்.

2. போட்டோதெரபி

  • அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர் மருத்துவத்தால் சொரியாசிஸ் நன்கு குணமாகும்.
  • அல்ட்ரா வைலட் ஒளி அது ஹிக்ஷிஙி அல்லது ஹிக்ஷிகி இருந்தாலும்சரி, தொடர்ந்து பல மாதங்கள், மருத்துவம் செய்துகொண்டால், சொரியாசிஸை நன்கு குணப்படுத்தலாம்.

3. மருந்துகள்

  • தீவிர சொரியாசிஸ§க்கு, உங்கள் தோல்துறை வல்லுனர் வாய்வழி கொள்ளும் மெதாட்டுரக்ஸாட் (methotrexate) அசிட்ரெடின், சைக்ளோஸ்போரின், சல்பா சலாஜைன் போன்ற மருந்துவில்லைகளை எழுதித்தரலாம்.
  • இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை

  • தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
  • மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
  • சொரியாசிஸைக் குணப்படுத்த எழுதித்தரப்பட்ட மருந்து வில்லைகளையும், மருந்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
  • மருத்துவத்தைத் தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
  • தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், புரையேற்படுவதையும் தடுக்கும்.
  • சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
  • மன அழுத்தம் சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும். அமைதியாக யிருக்க, உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும், விருப்பு எடுத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்

ideal-image

Share This Post

Post Comment