வயிற்று போக்கு குணமாக எளிய வைத்தியம்

ekuruvi-aiya8-X3

sundai_vattalகுடலை பற்றுகிற கிருமிகள், செரிமானம் இன்மை, வயிற்றுப்புண் போன்றவற்றால் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. வயிற்றுபோக்கினால் நீர்சத்து குறைந்து சோர்வு ஏற்படும். வில்வப்பழத்தை பயன்படுத்தி வயிற்றுபோக்கை சரிசெய்யும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வில்வப்பழம், தேன். ஒரு ஸ்பூன் வில்வப்பழத்தின் சதையை எடுத்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர வயிற்றுபோக்கு வெகுவிரைவில் சரியாகும். குடல்புண் ஆறும்.

குடலை பற்றி துன்புறுத்துகிற நோயான வயிற்றுப்போக்கிற்கு வில்வப்பழத்துக்கு மருந்தாகிறது. இது ஒவ்வாமையை போக்க கூடியது. உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. வில்வப்பழம் குடலை பற்றி துன்புறுத்துகின்ற நோய்களை குணப்படுத்தும். புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சுண்டை வற்றல் சூரணத்தை பயன்படுத்தி வயிற்றுப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சுண்டை வற்றல், மோர்.

ஒரு டம்ளர் மோரில் அரை ஸ்பூன் சுண்டை வற்றல் சூரணம் கலந்து காலை, மாலை என இருவேளை குடித்துவர வயிற்றுப்போக்கு குணமாகும். வயிற்றில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட சுண்டைவற்றல் பித்த சமனியாகிறது. வயிற்றுபுண்களை ஆற்றுகிறது. வயிற்றுபோக்கிற்கு மருந்தாக அமைகிறது. கசப்பு சுவையுடைய இது பசியை தூண்டுவதாகவும் இருக்கிறது.

மாம்பருப்பை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாம்பருப்பு, பனங்கற்கண்டு. மாம்பருப்பை சிறுசிறு துண்டுகளாக்கி நசுக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இருவேளை குடித்துவர வயிற்றுப்போக்கு வெகுவிரைவில் குணமாகும்.

மாம்பருப்பு சிறந்த மருந்துவ குணங்களை கொண்டது. வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும் தன்மை உடையது. துவர்ப்பு சுவையுடைய இது வயிற்றுப்போக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைகளுக்கு மருந்தாக அமைகிறது. மாதுளை தோல் வயிற்றுப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது. மாம்பருப்புக்கு பதிலாக மாதுளை தோலை பயன்படுத்தலாம். இந்த தேனீரை குடித்துவர வயிற்றுப்போக்கு குணமாகும்.

செரிமானம் இன்மை போன்ற எந்த வகையான வயிற்றுபோக்காக இருந்தாலும், சுண்டைவற்றல், மாதுளை தோல், வில்வப்பழம் போன்றவற்றை பயன்படுத்தி இல்லத்தில் இருந்தவாறே பாதுகாப்பான மருத்துவத்தை செய்து நாம் பயன்பெறலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு வசம்பு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. வசம்புவை விளக்கெண்ணெய்யில் துவைத்து தீயில் காண்பித்து கருக்கி சிறிது பால்விட்டு இழைத்து தொப்புளின்மேல் தடவினால் வாயு வெளியேறி வயிற்று வலி குணமாகும். நன்கு செரிமானம் ஆகும்.

Share This Post

Post Comment