பித்தவெடிப்புக்கு எளிமையான தீர்வு இதோ…

ekuruvi-aiya8-X3

daniyaஅடுத்தவர் கண்ணுக்கு அத்தனை எளிதில் தெரியாது என்பதால் பாதப் பராமரிப்பு பல பெண்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தவிர, பாதப் பிரச்சினையில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தம் அதிகமாவதால் குதிகால் வெடிப்பு, பாதத்தில் வலி, குடைச்சல் போன்றவை ஏற்படக்கூடும். தோல் வெடிப்பு ஏற்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தோல் உரிந்துவரும். தோல் உரிவதால் வலி உண்டாகும். நம் கைக்கெட்டும் பொருட்களை வைத்தே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

மல்லி விதை (தனியா), சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து இறக்குங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக ஆறியதும் அந்தத் தண்ணீரைத் தாம்பாளத்தில் ஊற்றி, பாதத்தை அதில் பத்து நிமிடம் வையுங்கள். அல்லது மல்லி – சீரகப் பொடியைத் தினமும் காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டுவர, நாளடைவில் பாத வெடிப்பு காணாமல் போய்விடும். கால் ஆணியும் வராது. நகமும் நன்றாக வளரும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

அதேபோல சிலருக்குக் கால் நகங்கள் சொத்தையாக இருக்கும். நக வெடிப்பு இருக்கும். கிருமித் தொற்று இருக்கும். இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் உடலில் கால்சியம் குறைவதும் காரணமாக இருக்கலாம். வாரம் இரண்டு நாட்கள் உணவில் கீரையைச் சேர்த்துக்கொண்டால் கால்சியச் சத்து கிடைக்கும். முருங்கை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, தண்டுக்கீரை போன்றவற்றில் கால்சியம் அதிகம் இருக்கிறது.

Share This Post

Post Comment