தோல்விக்கு மீடியாக்களே காரணம் – முலாயம் சிங்

sdsd

mulayam_singhஉத்தரப் பிரதேசம் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வி அடைந்ததற்கு மீடியாக்களே காரணம் என அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த உ.பி., சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ., ஆட்சியை கைபற்றியது. அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு வெறும் 47 இடங்களே கிடைத்தன.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்ததாவது:

உ.பி.,யில், அகிலேஷ் தலைமையில் நடந்த ஆட்சியில், பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், சமாஜ்வாதி கட்சியில், குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டையை மட்டும், மீடியாக்கள் பெரிதுபடுத்தின. இதனால்தான், உ.பி.,யில் தோல்வியடைந்தோம். கட்சியின் தலைமை மாறியது தோல்விக்கு காரணமில்லை. ‘மோடியை பின்தொடருவோம், மோடியை பின்தொடருவோம்’ என்று கூறியே மக்களை பா.ஜ., முட்டாளாக்கி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment