தீவிரவாத தாக்குதலில் இருந்து ஜேம்ஸ் மேட்டிஸ் பத்திரமாக உயிர் தப்பினார்

Facebook Cover V02
Militants-attack-Kabul-airport-during-Mattis-visitஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை ஒடுக்க அமெரிக்க கூட்டுப்படை அங்கு முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவரது அமைச்சரவை உறுப்பினர் ஆப்கன் வருவது இதுவே முதல் முறையாகும். மேட்டிசுடன் நேட்டோ படைத் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்கும் வந்திருந்தார்.
அவர்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையம் வந்த அடுத்த சில மணி நேரங்களில் விமான நிலையம் அருகே 6 ராக்கெட்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ பிரிவு அருகே நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பல பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என நாட்டோ படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த நிலையில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக விமான நிலையத்தில் போக்குவரத்து எதுவும் ரத்து செய்யப்படவில்லை.

Share This Post

Post Comment